< Back
கிரிக்கெட்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ருதுராஜ் அபார சதம்- இந்திய ஏ அணி 293 ரன்கள் குவிப்பு

Image Courtesy: PTI

கிரிக்கெட்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ருதுராஜ் அபார சதம்- இந்திய ஏ அணி 293 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
16 Sept 2022 12:04 AM IST

சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி, பிரியங் பஞ்சல் தலைமயிலான இந்திய ஏ அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த சூழலில் 3-வது டெஸ்ட் பெங்களூருவில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்-யின் சதத்தால் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு அளித்த உபேந்திரா யாதவ் 76 ரன்கள் குவித்தார்.

மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து ஏ அணியில் மேத்யூ பிஷர் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். நாளைய 2-வது நாள் ஆட்டத்தின் போது நியூசிலாந்து ஏ அணி தங்கள் முதல் இன்னிங்சை தொடங்குகிறது.

மேலும் செய்திகள்