ருதுராஜ் கடைசி வரை நின்று சிறப்பான வேலையை செய்தார் - டேரில் மிட்செல் பேட்டி
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சி.எஸ்.கே - ராஜஸ்தான் அணிகள் மோதின.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் சென்னை அணி வீரர் டேரில் மிட்செல் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த ஸ்லோவான பிட்ச்சில் வெற்றியின் எல்லை கடந்தது நன்றாக இருக்கிறது. மீண்டும் நாங்கள் வெற்றிப் பாதையில் பயணிப்பது நல்லது. எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தான் மீது அழுத்தத்தை போட்டு அவர்களை கட்டுப்படுத்தினர்.
மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் சிறப்பான வேலையை செய்தனர். பகல் நேரத்தில் நடைபெறும் போட்டிகளில் எது சராசரியான ஸ்கோர் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் சிறிய பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்துகிறேன். என்னைப் பொறுத்த வரை புதிய பந்தில் பேட்டிங் செய்வது சிறந்தது.
ருதுராஜ் கடைசி வரை நின்று சிறப்பான வேலையை செய்தார். இவை அனைத்தும் எங்களுக்குள் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு யாரை அடிக்கலாம் என்பது பற்றியதாகும். இது போன்ற ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்னே விளையாடுவது எப்போதும் அருமையானது. இது போன்ற சத்தம் எங்களை அதிர்ஷ்டமிக்கவர்களாக உணர வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.