< Back
கிரிக்கெட்
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
கிரிக்கெட்

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

தினத்தந்தி
|
8 May 2023 11:38 PM IST

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஜெய்பூர்,

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியின் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பட்லர் 95 ரன்களும் சாம்சன் 66 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

அப்துல் சமத் அதிரடியாக விளையாடியும் கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா அவுட்டாக்கினார். ஆனால் அதை நோ-பாலாக வீசிய காரணத்தால் கடைசியில் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அவர் 7 பந்தில் 17 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் அணி முதல் முறையாக 200+ இலக்க ரன்னை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.

மேலும் செய்திகள்