< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
'சூப்பர் 8' சுற்று: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு
|19 Jun 2024 7:44 PM IST
டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆன்டிகுவா,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல் 'சூப்பர் 8' சுற்று ஆட்டம் தொடங்குகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, ஆரோன் ஜோன்ஸ் தலைமையிலான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.