< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைக்க இருக்கும் ரோகித சர்மா

கோப்புப்படம் 

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைக்க இருக்கும் ரோகித சர்மா

தினத்தந்தி
|
19 Sept 2022 11:13 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்புள்ளது.

லக்னோ,

டி20 போட்டிகளில் இன்னும் இரண்டு சிக்சர்கள் அடித்தால் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னேறுவார். தற்போது 171 சிக்சர்களுடன் ரோகித் இரண்டாம் இடத்தில் உள்ளார். 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்டில் முதலிடத்தில் உள்ளார்.

அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார், அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் மோர்கன் உள்ளார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்