ரோகித் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்...இந்திய அணிக்கு புதிய தொடக்க ஜோடியை பரிந்துரைத்த வாசிம் ஜாபர்
|இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா 3வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றும், கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் எனவும் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும். ரோகித் 3வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.
அவரது முறைக்காக பேட் செய்யக் காத்திருப்பது சுப்மன் கில்லுக்கு உதவவில்லை. எனவே அவரை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும். ரோகித் ஸ்பின் நன்றாக விளையாடுகிறார், எனவே நம்பர் - 3 இல் பேட்டிங் செய்வது பற்றி அவர் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.