< Back
கிரிக்கெட்
எதிர்காலத்தில் ரோகித் சி.எஸ்.கே. அணிக்காக விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு
கிரிக்கெட்

எதிர்காலத்தில் ரோகித் சி.எஸ்.கே. அணிக்காக விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு

தினத்தந்தி
|
11 March 2024 12:52 PM IST

எதிர்காலத்தில் ரோகித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.பி.எல்-ல் சென்னை மற்றும் மும்பை அணிகளில் விளையாடி ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு எதிர்காலத்தில் ரோகித் சர்மா சென்னை அணியில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,'எதிர்காலத்தில் ரோகித், சி.எஸ். கே. அணிக்காக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார். அவர் சென்னைக்காக விளையாடி அங்கேயும் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். சி.எஸ்.கே அணியின் கேப்டன்சி வாய்ப்பும் அவர் மீது உள்ளது' என்று கூறினார்.

மேலும் செய்திகள்