< Back
கிரிக்கெட்
செக்யூரிட்டியை பதம் பார்த்த ரோகித் சர்மாவின் அசத்தல் சிக்சர்...! வைரல் வீடியோ
கிரிக்கெட்

செக்யூரிட்டியை பதம் பார்த்த ரோகித் சர்மாவின் அசத்தல் சிக்சர்...! வைரல் வீடியோ

தினத்தந்தி
|
7 Sept 2022 3:45 AM IST

ரோகித் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செக்யூரிட்டியை பதம் பார்த்தது.

துபாய்,

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. துபாய் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா அதிரடியில் மிரட்டினார்.

அவர் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் திரட்டினார். அதில் அவர் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செக்யூரிட்டியின் பின்பக்கத்தில் விழுந்தது. ரசிகர்களை நோக்கி அவர் நின்றுகொண்டிருந்தபோது பின்பக்கத்தில் பந்து அவரை தாக்கியது. எனினும் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த சமயத்தில் நபர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. போட்டியில் இறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்