< Back
கிரிக்கெட்
20 ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக 13 வெற்றிகள் - உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

Image Tweeted By @BCCI

கிரிக்கெட்

20 ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக 13 வெற்றிகள் - உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

தினத்தந்தி
|
8 July 2022 10:16 AM IST

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது.

சவுத்தம்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி ரோஸ் பவுலில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையிலான இந்திய அணி ஒரு 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்