< Back
கிரிக்கெட்
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா..? வெளியான தகவல்
கிரிக்கெட்

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
18 July 2024 5:25 PM IST

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்பில் ஆகஸ்டு 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இலங்கை தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விராட் கோலி மற்றும் பும்ரா தொடர்ந்து ஓய்வில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்