< Back
கிரிக்கெட்
உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ரோகித் சர்மா - வீடியோ
கிரிக்கெட்

உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ரோகித் சர்மா - வீடியோ

தினத்தந்தி
|
25 March 2024 6:28 PM IST

ரோகித் சர்மா ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. ஒரு கேப்டனாக சுப்மன் கில் பெற்றிருக்கும் முதல் வெற்றியாக இது இருக்கிறது. அதேநேரம், இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை அதிகாரத்துடன் பீல்டிங் செய்யுமாறு கூறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தன்னுடைய சக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளார்.

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்