ஐசிசி உலகக்கோப்பை கனவு அணிக்கு ரோகித் சர்மா கேப்டன்!
|ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் கனவு அணியில் இந்திய வீரர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
துபாய்,
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 'டைம்டு அவுட்' முறையில் அவுட் வழங்கப்பட்ட நிகழ்வும் இதில்தான் அரங்கேறியது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலகக்கோப்பைக்கான கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அதில் ரோகித், விராட் கோலி உட்பட 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்கான கனவு அணி;
1. ரோகித் சர்மா (கேப்டன்) (இந்தியா)
2. விராட் கோலி (இந்தியா)
3. கேஎல் ராகுல் (இந்தியா)
4. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
5. முகமது ஷமி ( இந்தியா)
6. பும்ரா ( இந்தியா )
7. டி காக் ( தென் ஆப்பிரிக்கா)
8. டேரில் மிட்செல் ( நியூசிலாந்து)
9. கிளென் மேக்ஸ்வெல் ( ஆஸ்திரேலியா)
10. தில்ஷன் மதுஷன்கா (இலங்கை)
11.ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா)
12. ஜெரால்ட் கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளில் இருந்து எந்த ஒரு வீரரும் கனவு அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.