மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரோகித் ரசிகர்...அமெரிக்க போலீஸ் செய்த சம்பவம்
|இந்தியா - வங்காளதேசம் விளையாடிய டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியின் இடையே ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோகித் சர்மாவை கட்டி அணைத்தார்.
நியூயார்க்,
இந்தியா - வங்காளதேசம் இடையேயான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் இடையே ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோகித் சர்மாவை கட்டி அணைத்தார். அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ஐந்து அமெரிக்க காவலர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தனர்.
அதில் இருவர் அந்த ரசிகர் மீது பாய்ந்தனர். அவரை தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர், அவரது இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கினர். பின்பு அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர். அவர் லேசாக அசைந்ததால் அவர் மீது முழு எடையையும் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர்.
இதனைக்கண்ட ரோகித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு காவலர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு அமெரிக்க காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் ஆடும் உலகக்கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இது போன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.