< Back
கிரிக்கெட்
ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைக்கப்போகும் ரோகித்- தவான் ஜோடி

கோப்புப்படம் 

கிரிக்கெட்

ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைக்கப்போகும் ரோகித்- தவான் ஜோடி

தினத்தந்தி
|
12 July 2022 2:19 PM IST

இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி சாதனை ஒன்றை படைக்கவுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.

இதில், ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி சாதனை ஒன்றை படைக்கவுள்ளது. இதன்மூலம், தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 2-வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள்.

முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி உள்ளனர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலிக்கு பிறகு ரோகித் மற்றும் தவான் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான தொடக்க ஜோடிகளாக இருந்துள்ளனர். 5000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 6 ரன்கள் மட்டுமே தேவை. தவான் மற்றும் ரோஹித் 111 இன்னிங்ஸ்களில் 4994 ரன்கள் குவித்துள்ளனர்.

கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரோகித்-தவான் ஜோடி நான்காவது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் 114 இன்னிங்ஸில் 5372 ரன்களும் 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடிகளான கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 102 இன்னிங்ஸில் 5150 ரன்களும் எடுத்துள்ளனர்.

ரோஹித் மற்றும் தவானை விட அதிக சதம் அடித்த தொடக்க வீரர்களாக கங்குலி மற்றும் டெண்டுல்கர் மட்டுமே உள்ளனர்.

மேலும் செய்திகள்