< Back
கிரிக்கெட்
இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல ரோகித் மற்றும் விராட் அணியில் தேவை - ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து
கிரிக்கெட்

இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல ரோகித் மற்றும் விராட் அணியில் தேவை - ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து

தினத்தந்தி
|
10 Jan 2024 7:43 PM IST

டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு ரோகித் மற்றும் விராட் ஆகியோர் தேவை என்பதை 20 வயதுடையவர்கள் கூட நன்றாக புரிந்து கொள்வார்கள்.

கேப்டவுன்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். அந்த நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல ரோகித் மற்றும் விராட் அணியில் தேவை என்று ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த 2 சீனியர் வீரர்களுக்கு ஆதரவும் வாய்ப்பு கொடுக்கும் இந்திய அணி நிர்வாகத்தைபோல் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தமக்கு கொடுக்கவில்லை என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"ரோகித் மற்றும் விராட் மீதான விமர்சனங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது ஒரு உலகக்கோப்பை. அதனை வெல்வதற்கு ரோகித் மற்றும் விராட் ஆகியோர் தேவை என்பதை 20 வயதுடையவர்கள் கூட நன்றாக புரிந்து கொள்வார்கள்.

நான் 35 வயதில் இருந்தபோது இது போன்ற அணி நிர்வாகம் எனக்கு அமைந்திருப்பதை விரும்புகிறேன். இப்போதே ரோகித் மற்றும் விராட் ஆகியோரை தேர்வு இந்தியா தங்களுடைய அதிரடியான அணுகுமுறையை காண்பித்துள்ளது. இந்தியா டி20 உலகக்கோப்பை பற்றி தெளிவாக சிந்திக்கிறது. இது நல்ல முடிவாகும். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எப்போதும் நல்ல வீரர்களை வைத்து விளையாட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்