< Back
கிரிக்கெட்
ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர்தான்.. அதற்காக தோனியுடன் ஒப்பிடாதீர்கள் - இந்திய முன்னாள் வீரர்
கிரிக்கெட்

ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர்தான்.. அதற்காக தோனியுடன் ஒப்பிடாதீர்கள் - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
22 Sept 2024 7:10 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்தார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார்.

அது போக ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் தான் சிறந்தவர் என்று பலரும் பாராட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்போதே தோனியுடன் ஒப்பிடுவது ரிஷப் பண்டுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி இந்தியாவை நம்பர் ஒன் 1 அணியாக முன்னேற்றிய பெருமை தோனிக்கு உள்ளது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தது உட்பட தோனி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். -

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "34 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட்டை அதற்குள் இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு நேரத்தை கொடுங்கள். அதற்குள் முடிவுக்கு வராதீர்கள். ஆனால் கண்டிப்பாக இந்திய கிரிக்கெட்டின் மகத்தான விக்கெட் கீப்பராக கெரியரை முடிக்கும் வழியில் ரிஷப் பண்ட் உள்ளார்.

அதே சமயம் விக்கெட் கீப்பராக தோனியின் திறமையையும் தள்ளுபடி செய்து விடாதீர்கள். அவர் நன்றாக கீப்பிங் செய்தது மட்டுமின்றி இந்தியாவுக்காக தேவைப்படும் நேரங்களில் ரன்கள் அடித்துள்ளார். அவர் இந்திய அணியை நம்பர் 1 இடத்தை பிடிக்க தலைமை தாங்கினார். எனவே ஒரு வீரரை பற்றி நீங்கள் பேசும்போது இது போன்ற மற்றவைகளையும் ஒப்பிட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்