< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ரிஷப் பண்ட் அணியில் களம் காணுவது அவசியம் - இந்திய முன்னாள் வீரர்
|15 Oct 2022 8:09 AM IST
ரிஷப் பண்ட் அணியில் களம் காணுவது அவசியம் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில், 'அணியில் மிடில் வரிசையில் இடக்கை ஆட்டக்காரர்கள் இருப்பது மிகவும் முக்கியம். முதல் 6 வரிசையில் நம்மிடம் இடக்கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. நிச்சயம் எதிரணியில் 2-3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள்.
அவர்களை சமாளிக்க இடக்கை பேட்ஸ்மேன் அவசியம். 2007, 2011, 2013-ம் ஆண்டுகளில் பார்த்தால் நமது அணியில் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங் மற்றும் நான் ஆகிய இடக்கை ஆட்டக்காரர்கள் முக்கிய பங்களிப்பு வழங்கினோம். இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுடன் இடக்கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் துருப்பு சீட்டாக இருப்பார் என்று கருதுகிறேன். எனவே அவர் அணியில் களம் காணுவது அவசியம்' என்றார்.