< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் ரிஷப் பண்ட் - வைரலாகும் புகைப்படம்
|20 Aug 2024 9:05 PM IST
கபாலி படத்தில் ரஜினிகாந்த் அமர்ந்தது போன்று தான் ஸ்டைலாக அமர்ந்துள்ள புகைப்படத்தை ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் மாநில கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் முதல் முறையாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் டெல்லி பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 லீக் போட்டியை தொடங்கியது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான புரணி டெல்லி அணி, சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதில் ரிஷப் பண்ட் 32 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதில் ரிஷப் பண்ட் அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினிகாந்த் அமர்ந்தது போன்று தான் ஸ்டைலாக அமர்ந்துள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரிஷப் பண்ட், தலைவா என கமெண்டும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.