< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண பார்வையாளராக வந்த ரிஷப் பண்ட்
|4 April 2023 10:56 PM IST
ஐபிஎல்-ல் டெல்லியும், குஜராத் அணி மோதிவரும் போட்டியை கான ரிஷப் பண்ட் பார்வையாளராக மைதானத்திற்கு வருகைதந்துள்ளார்.
டெல்லி,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியும், குஜராத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியை கான ரிஷப் பண்ட் பார்வையாளராக மைதானத்திற்கு வருகைதந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுள்ள நிலையில், தற்போது ஓய்வில் உள்ளார். இந்த விபத்து காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், நடப்பாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
அவர் ஐபிஎல்-ல் டெல்லி அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், டெல்லி அணி விளையாடிவரும் போட்டியை காண அவர் பார்வையாளராக மைதானத்திற்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.