< Back
கிரிக்கெட்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரிஷப் பண்ட் - அக்சர் படேல்...வைரலாகும் வீடியோ...!
கிரிக்கெட்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரிஷப் பண்ட் - அக்சர் படேல்...வைரலாகும் வீடியோ...!

தினத்தந்தி
|
3 Nov 2023 4:09 PM IST

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திருப்பதி,

இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்