< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா மற்றும் கம்பீர் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்
கிரிக்கெட்

ரோகித் சர்மா மற்றும் கம்பீர் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்

தினத்தந்தி
|
20 Aug 2024 2:30 AM IST

ரோகித் சர்மா மற்றும் கம்பீர் குறித்து சில கருத்துகளை ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வரும் ரிங்கு சிங், அறிமுகம் ஆன முதலே அதிரடியில் வெளுத்து வாங்கி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் அதிரடியாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர், பினிஷராக செயல்பட்டு பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீர் குறித்தும், கேப்டன் ரோகித் சர்மா குறித்தும் ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.

அதில், "கவுதம் கம்பீர் போட்டியைப் பற்றி மிகவும் சீரியஸாக இருப்பார். அதனாலேயே போட்டி நடக்கும்போது அவர் மிகவும் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். ஆனால் போட்டி முடிந்ததும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். எனவே அனைத்து நேரங்களிலும் அவர் சீரியஸாக இருப்பார் என்று அர்த்தமில்லை. போட்டி முடிந்ததும் அவர் சாதாரணமாகி விடுவார்.

ரோகித் சர்மா இளம் வீரர்களிடம் நிறைய பேசி ஆதரவை கொடுப்பார். அவருடைய தலைமையில் விளையாடுவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்