< Back
கிரிக்கெட்
சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கும்  ஜடேஜாவுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டதா? - அம்பத்தி ராயுடு விளக்கம்
கிரிக்கெட்

சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதா? - அம்பத்தி ராயுடு விளக்கம்

தினத்தந்தி
|
25 July 2023 3:46 PM IST

2022-ஆம் ஆண்டு தோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே எந்த மோதலும் ஏற்படவில்லை என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவுக்கும் அந்த அணியின் கேப்டன் டோனிக்கும் இடையே மோதல்கள் இருந்து வருவதாக அவ்வப்போது பரவலாக தகவல்கள் வெளியாகின. இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதிக் கட்டத்தில்கூட ஜடேஜா - டோனி இடையே பிரிவு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜடேஜா அணி கோப்பையை வென்று சாதனை படைக்க உறுதுணையாக இருந்தார்.

இந்த நிலையில், டோனி - ஜடேஜா இடையே பிரிவு என்பது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ராயுடு கூறியதாவது, "2022-ல் ஜடேஜாவுக்கு டோனியின் மீது அதிருப்தி எல்லாம் இல்லை. ஜடேஜா 2022-ம் ஆண்டு தன் தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடவில்லை என்றுதான் கவலையாக இருந்தார். அந்த சீசனில் சிஎஸ்கேவில் யாரும் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜடேஜாவின் ஆட்டத்தைக் கண்டு டோனி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.

மேலும் செய்திகள்