< Back
கிரிக்கெட்
அடுத்த 12 மாதங்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு  -  டேவிட் வார்னர் சூசகம்

Image Courtesy : AFP 

கிரிக்கெட்

அடுத்த 12 மாதங்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் சூசகம்

தினத்தந்தி
|
15 Nov 2022 10:15 AM GMT

அடுத்த 12 மாதங்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சூசகமாக கூறி உள்ளார்

மெல்போர்ன்,

அடுத்த 12 மாதங்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சூசகமாக கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த வார்னர்,

தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்துதான் முதலில் ஓய்வு பெறுவேன் . அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்களை கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தனது கடைசி 12 மாதங்களாக வரப்போகும் மாதங்கள் அமையும் என்றும் வார்னர் தெரிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் ஆஷஸ் டெஸ்ட் நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்