< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - தென் ஆப்பிரிக்க வீரர் குறித்து வெளியான தகவல்..?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - தென் ஆப்பிரிக்க வீரர் குறித்து வெளியான தகவல்..?

தினத்தந்தி
|
22 Dec 2023 1:34 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் டீன் எல்கர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டீன் எல்கர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5146 ரன்களும், 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி 104 ரன்களும் எடுத்துள்ளார். டீன் எல்கர் ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்