< Back
கிரிக்கெட்
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Jun 2024 4:28 PM IST

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ். மகாராஷ்டிராவை சேர்ந்த இவருக்கு தற்போது வயது 39. இவர் இந்திய அணிக்காக கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இந்திய அணிக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இதில் 73 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1389 ரன்னும், 27 விக்கெட்டும், 9 டி20 போட்டிகளில் ஆடி 122 ரன்னும் எடுத்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2020ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார்.

மேலும் இவர் 95 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக ஆடியுள்ளார். இவர் 95 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 1208 ரன்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது ஓய்வு முடிவால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்