கிரிக்கெட்
மீண்டும் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்? வெளியான தகவல்
கிரிக்கெட்

மீண்டும் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்? வெளியான தகவல்

தினத்தந்தி
|
13 Aug 2024 1:11 PM GMT

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மும்பை,

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென்று ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது. -

இது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியது பின்வருமாறு:- "இது தொடர்பாக முன்னாள் வீரர்களிடமிருந்து எங்களுக்கு முன்மொழிவு கிடைத்துள்ளது. அது தற்போது பரிசீலனையில் உள்ளது. அது முன்மொழிவு கட்டத்தில் மட்டுமே உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. இருப்பினும் அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம் பெறுவார்கள்" என்று கூறினார்.

முன்னதாக சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடிய உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்