< Back
கிரிக்கெட்
இலங்கை தொடரிலும் விராட், ரோகித், பும்ராவுக்கு ஓய்வா..? வெளியான தகவல்

image courtesy: ANI 

கிரிக்கெட்

இலங்கை தொடரிலும் விராட், ரோகித், பும்ராவுக்கு ஓய்வா..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
9 July 2024 3:06 PM IST

இந்தியா - இலங்கை இடையிலான தொடர் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது.

இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதன் மண்ணில் இந்தியா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.இந்நிலையில் ஜூலை 27 - ஆகஸ்ட் 7 வரை நடைபெறும் அந்தத் தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்