< Back
கிரிக்கெட்
4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வா? வெளியான தகவல்

image courtesy; AFP

கிரிக்கெட்

4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வா? வெளியான தகவல்

தினத்தந்தி
|
19 Feb 2024 3:44 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்