< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
புதுப்பிக்கப்பட்டுள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம் - முதல் அமைச்சர் திறந்து வைக்கிறார்
|4 March 2023 10:05 PM IST
புதுப்பிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய கேலரிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள சென்னை ,சேப்பாக்கம் மைதானம் வரும் 17ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 22ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வருகிற 17ம் தேதி, புதுப்பிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.