கடைசி டி20-ல் அதிரடி சதமடித்த சூர்யகுமார் யாதவை டுவீட்டரில் புகழும் முன்னாள் இந்திய வீரர்கள்
|பந்துகளை நாலாபுறம் பவுண்டரி, சிக்சருக்கு விரட்டிய சூர்யகுமார், வெறும் 55 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து எதிரணியை மிரட்டினார்.
நாட்டிங்காம்,
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ரோகித், கோலி, பண்ட் ஆகிய முன்னனி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருந்தாலும், ஒன் மேன் ஆர்மியாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல கடைசி வரை போராடியவர் சூர்யகுமார் யாதவ். இவர் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால், இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றிருக்கும் என்ற அளவுக்கு நேற்று இவரது அதிரடி பேட்டிங் இருந்தது.
இவரின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. பந்துகளை நாலாபுறம் பவுண்டரி, சிக்சருக்கு விரட்டி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
வெறும் 55 பந்துகளில் 14 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்த அவர், 19 ஆவது ஓவரில் மொயீன் அலி பந்துவீச்சில் கேட்ச்சாகி வெளியேற, இந்திய அணியின் வெற்றிக்கனவு முடிவுக்கு வந்தது.
இந்திய அணி தோற்றாலும், இவரது அதிரடி ஆட்டத்தை முன்னாள் இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சேவாக், கவுதம் காம்பீர், அமித் மிஷ்ரா, வாஷிம் ஜாபர் ஆகியோர் டுவீட்டரில் பாராட்டி புகழ்ந்துள்ளனர்.
Amazing @surya_14kumar!
— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2022
There were quite a few brilliant shots but those scoop 6️⃣s over point were just spectacular.#ENGvIND pic.twitter.com/vq7PbyfpSL
Wow SKY! Surya shining at it's brightest. Crazy hitting #IndvEng
— Virender Sehwag (@virendersehwag) July 10, 2022
Remember the name….SKY!
— Gautam Gambhir (@GautamGambhir) July 10, 2022