ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு
|ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2024-2025 ஆண்டுக்கான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2024-2025 ஆண்டுக்கான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகர் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் ஆடி வரும் டேவிட் வார்னர் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். புதிதாக சேவியர் பார்ட்லெட், ஆரோன் ஹார்டி, மேத்யூ ஷார்ட், நாதன் எல்லிஸ் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு:-
சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலந்து, அலேக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, ஜை ரிச்சர்ட்சன், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் சுமித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.