< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
அணியில் மீண்டும் தேர்வானால் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயார் - வார்னர் அதிரடி அறிவிப்பு
|9 July 2024 3:44 PM IST
டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அறிவித்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3277 ரன்களும் குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டி டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டேவிட் வார்னர், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வானால் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயார்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.