< Back
கிரிக்கெட்
ஆர்.சி.பி. அணியை பற்றி பேசுவதே பயனற்ற ஒன்றாக நினைக்கிறேன் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy: AFP

கிரிக்கெட்

ஆர்.சி.பி. அணியை பற்றி பேசுவதே பயனற்ற ஒன்றாக நினைக்கிறேன் - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
7 April 2024 4:10 PM IST

17 ஆண்டுகளாக ஆர்.சி.பி. அணியில் விராட் கோலி மட்டுமே விளையாடி வருவதாக முகமது கைப் விமர்சித்துள்ளார்.

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( ஆர்.சி.பி.) இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போலவே தடுமாறி வரும் அந்த அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே கண்டுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசியபோதும், மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால் ஆர்.சி.பி. அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதேபோல் பவுலிங்கிலும் அதிக ரன்களை பவுலர்கள் விட்டுக் கொடுக்க, 19.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றிபெற்றது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் பேசுகையில், "ஆர்.சி.பி. அணியை பற்றி பேசுவதே பயனற்ற ஒன்றாக நினைக்கிறேன். அவர்களை பற்றி சொல்வதற்கும் என்னிடம் ஒன்றும் கிடையாது. விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலர்கள் கூட கிடையாது. 17 ஆண்டுகளாக விராட் கோலி மட்டுமே ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு வீரராக விராட் கோலி வேறு என்ன செய்ய முடியும்? 17 ஆண்டுகளாக ஆர்.சி.பி. அணியின் கதை ஒன்றுதான். அதற்கு விடையே கிடையாது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்