
Image Courtesy: @RCBTweets
இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு ஆர்.சி.பி அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது - இங்கிலாந்து முன்னாள் வீரர்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
பெங்களூரு,
ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கொல்கத்தா வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அதிலும் கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பில் சால்ட் மற்றும் நரைன் முதல் 6 ஓவர்களில் 85 ரன்கள் குவித்து அசத்தினர். இதையடுத்து களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் ஆர்.சி.பி அணி இந்த பந்துவீச்சு கூட்டணியை வைத்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல சாத்தியமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.