< Back
கிரிக்கெட்
வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவைச்சிகிச்சை... நன்றி தெரிவித்த ஜடேஜா

image tweeted by @ChennaiIPL

கிரிக்கெட்

வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவைச்சிகிச்சை... நன்றி தெரிவித்த ஜடேஜா

தினத்தந்தி
|
7 Sept 2022 1:15 AM IST

காயத்தால் அவதிப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது.

துபாய்,

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் விளையாடியபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

தற்போது அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜடேஜா சமூக வலைதள பக்கத்தில் தான் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

அதில், தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று கூறிய அவர், பிசிசிஐ, சக வீரர்கள், பிசியோ மருத்துவர்கள், ரசிகர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து பயிற்சியை தொடங்கி அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார். எனினும், அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் தான்.

இந்த நிலையில், ஜடேஜா காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என சென்னை அணி நிர்வாகம் தன்னுடைய டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்