< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் : காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகல்

Image Courtesy : AFP 

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் : காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகல்

தினத்தந்தி
|
22 July 2022 7:42 PM IST

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. அவரது காயம் குணமாகும் தன்மையை பொறுத்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்