சிஎஸ்கே தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கிய ஜடேஜா; அணியில் இருந்து விலகுகிறாரா?
|சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவுகளை ரவிந்திர ஜடேஜா நீக்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் உலக அளவில் பிரபலமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சென்னை அணியில் நட்சத்திர வீரர்களில் முக்கியமானவர் ரவிந்திர ஜடேஜா. ஆல் ரவுண்டரான ஜடேஜா சிஎஸ்கே அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.
இதற்கிடையில், ரவிந்திர ஜடேஜா தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிஎஸ்கே தொடர்பான அனைத்து புகைப்படங்கள், பதிவுகளை இன்று அதிரடியாக நீக்கியுள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலக உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
சிஎஸ்கே தொடர்பான பதிவுகளை ஜடேஜா இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.