< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் ரவீந்திர ஜடேஜா

Image Courtesy: @ChennaiIPL

கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் ரவீந்திர ஜடேஜா

தினத்தந்தி
|
15 March 2024 1:48 PM IST

வரும் 22ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

சென்னை,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தற்போது சென்னை வந்தடைந்துள்ளார். அவர் சென்னை வந்துள்ள தகவலை சி.எஸ்.கே நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஜடேஜா அந்த தொடர் நிறைவடைந்த பின்னர் தற்போது ஐ.பி.எல் தொடரில் கலந்து கொள்ள உள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் செய்திகள்