ரஞ்சி கோப்பை; தமிழகத்துக்கு எதிராக டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங் தேர்வு
|இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் கர்நாடகாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த போட்டியில் களமிறங்காத கர்நாடகா அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சி, டி, இ, ஆகிய ஸ்டாண்டுகளின் கீழ்தளத்தில் அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என்றும், விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் உள்ள 4-வது நுழைவு வாயில் வழியாக ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.