< Back
கிரிக்கெட்
ரஞ்சி டிராபி கிரிக்கெட்; மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்

கோப்புப்படம்

கிரிக்கெட்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்

தினத்தந்தி
|
28 Feb 2024 9:50 AM IST

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

மும்பை,

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ வலியுறுத்துவது உண்டு.

அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு. ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள்.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை ரஞ்சி டிராபியில் விளையாட பி.சி.சி.ஐ கூறியதாகவும், ஆனால் அவர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல் வெளியானது. இதனால் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை என பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்