ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டி எங்கு நடைபெறும்..? - வெளியான தகவல்
|ரஞ்சி டிராபி தொடரின் இறுதி ஆட்டம் வரும் 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதிக்கு தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் தமிழ்நாடு - மும்பை, விதர்பா - மத்திய பிரதேச அணிகள் அரையிறுதியில் மோதின.
இதில் தமிழ்நாடு - மும்பை இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விதர்பா - மத்திய பிரதேச அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் இறுதி ஆட்டம் வரும் 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.