< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தோல்வி எதிரொலி.. டெல்லி கேப்டன் அதிரடி நீக்கம்.!
|9 Jan 2024 2:12 AM IST
புதுச்சேரியிடம் படுதோல்வி அடைந்த நிலையில், டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து யாஷ் துல் நீக்கப்பட்டார்.
டெல்லி,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி- புதுச்சேரி அணிகள் டெல்லி மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி புதுச்சேரி அணி எளிதில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில், புதுச்சேரியிடம் படுதோல்வியை தழுவிய அடுத்த ஒரு மணி நேரத்தில் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து யாஷ் துல் நீக்கப்பட்டார். அடுத்த போட்டியில் இருந்து மூத்த பேட்ஸ்மேன் ஹிமாத் சிங் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'21 வயதான யாஷ் துல் திறமையான வீரர். ஆனால் பார்மின்றி தடுமாறுகிறார். ஒரு பேட்டராக அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் தான் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளோம்' என்று டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்தார்.