ரஞ்சி கிரிக்கெட்; தமிழ்நாடு - பஞ்சாப் ஆட்டம் இன்று தொடக்கம்
|89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சேலம்,
89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப்பை இன்று சந்திக்கிறது. இந்த 4 நாள் ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கு ரஞ்சி போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும்.
இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என 22 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் தமிழக அணி காலிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். 9 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.