< Back
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு எதிரான ஆட்டம் - மும்பை அணி 39 ரன்கள் முன்னிலை
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு எதிரான ஆட்டம் - மும்பை அணி 39 ரன்கள் முன்னிலை

தினத்தந்தி
|
4 Jan 2023 5:12 AM IST

மும்பை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து 39 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

மும்பை,

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு- மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 36.2 ஓவர்களில் 144 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 55 ரன்னும், ஜெகதீசன் 23 ரன்னும் எடுத்தனர்.

சாய் சுதர்சன் (0), பாபா அபராஜித் (8 ரன்), கேப்டன் பாபா இந்திரஜித் (9 ரன்), ஷாருக்கான் (1 ரன்) ஏமாற்றம் அளித்தனர். மும்பை தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 5 விக்கெட்டும், ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய மும்பை அணி நேற்றைய முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து 39 ரன் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்