< Back
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட் அரைஇறுதி போட்டி: 4வது நாள் முடிவில் மத்திய பிரதேச அணி 228/6
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட் அரைஇறுதி போட்டி: 4வது நாள் முடிவில் மத்திய பிரதேச அணி 228/6

தினத்தந்தி
|
6 March 2024 5:15 AM IST

மத்தியபிரதேசத்தின் வெற்றிக்கு இன்னும் 93 ரன்கள் தேவைப்படுகிறது.

நாக்பூர்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா - மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 170 ரன்னும், மத்தியபிரதேசம் 252 ரன்னும் எடுத்தன. 82 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்திருந்தது. யாஷ் ரதோட் (97 ரன்), ஆதித்யா சர்வாதே (14 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி 101.3 ஓவர்களில் 402 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. சதம் அடித்த யாஷ் ரதோட் (141 ரன், 200 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் மத்தியபிரதேச அணிக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி ஆட்ட நேர முடிவில் 71 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 228 ரன்களுடன் போராடுகிறது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. மத்தியபிரதேசத்தின் வெற்றிக்கு இன்னும் 93 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 4 விக்கெட் மட்டுமே உள்ளது.

மேலும் செய்திகள்