< Back
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவைImage Courtesy : @BCCIdomestic twitter
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவை

தினத்தந்தி
|
4 Feb 2023 5:50 AM IST

பஞ்சாப் அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையி, அந்த அணி வெற்றி பெற மேலும் 200 ரன்கள் தேவைப்படுகிறது.

ராஜ்கோட்,

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பஞ்சாப் அணிகள் மோதும் கால்இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 303 ரன்னும், பஞ்சாப் அணி 431 ரன்னும் சேர்த்தன. 128 ரன்கள் பின்தங்கிய சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று தொடர்ந்து மட்டையை சுழற்றிய சவுராஷ்டிரா அணி 379 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரேராக் மன்கட் 88 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வினய் சவுத்ரி 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு மேலும் 200 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. அரைஇறுதியில் மத்திய பிரதேசம்-பெங்கால் அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் கர்நாடக அணி, சவுராஷ்டிரா அல்லது பஞ்சாப் அணியை சந்திக்கும்.

மேலும் செய்திகள்