< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டம் - பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவிப்பு
|3 Feb 2023 2:39 AM IST
சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது.
ராஜ்கோட்,
ராஜ்கோட்டில் நடக்கும் சவுராஷ்டிரா-பஞ்சாப் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 303 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் அணி 2-வது நாளில் 5 விக்கெட்டுக்கு 327 ரன்கள் எடுத்து இருந்தது.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 431 ரன்னில் ஆட்டமிழந்தது. 128 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.