< Back
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட்: அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேதர் ஜாதவ் 283 ரன்கள் விளாசல்

Image Courtesy : @Cricketracker twitter

கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேதர் ஜாதவ் 283 ரன்கள் விளாசல்

தினத்தந்தி
|
6 Jan 2023 5:23 AM IST

மராட்டிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 594 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

புனே,

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அசாம்-மராட்டிய அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) புனேவில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தத மராட்டிய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 594 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முச்சதத்தை நழுவ விட்ட கேதர் ஜாதவ் 283 ரன்கள் (283 பந்து, 21 பவுண்டரி, 12 சிக்சர்) நொறுக்கி கேட்ச் ஆனார். இதையடுத்து 320 ரன்கள் பின்தங்கிய அசாம் அணி 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்