< Back
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி 241 ரன்னில் ஆல்-அவுட்
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி 241 ரன்னில் 'ஆல்-அவுட்'

தினத்தந்தி
|
3 Feb 2024 1:39 AM IST

தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்தது.

கோவா,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் கோவாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவா கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த கோவா அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சுயாஷ் பிரபுதேசாய் 104 ரன்னும், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 69 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்