< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். போட்டி: மழையால்  கைவிடப்பட்ட ஆட்டம்
கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்

தினத்தந்தி
|
19 May 2024 11:11 PM IST

மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டது.

கவுகாத்தி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட இருந்தன. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த சூழலில் அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் சிறிதுநேரம் மழை நின்றதால் போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில்

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்யத் தொடங்கிய போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் முதல் இடத்தை கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2வது இடத்தையும், ராஜஸ்தான் அணி 3-வது இடத்தையும், பெங்களூரு அணி 4-வது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா அணி- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் அணி- பெங்களூரு அணியையும் எதிர்த்து விளையாட உள்ளது.

மேலும் செய்திகள்